திருச்சி மாவட்டம், முசிறி அருகேசி சிட்டிலரை மேலமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75). கடந்த 2-ந் தேதி வயலில் இருந்த மாணிக்கத்தின் மருமகள் மருதாம்பாள் (46) என்பவர்
நிலத்தகராறு தொடர்பாக தகராறு செய்து மாணிக்கத்தை அரிவாளால் வெட்டி தப்பி ஓடியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த மாணிக்கம் முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார்.
இதுகுறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாகியிருந்த மருதாம்பாளை தேடி வந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவல் நிலையத்தில் சரணடைந்த மருதாம்பாளை முசிறி போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.