திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையம் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழா நடந்து சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் இன்று தான் 2வது முனையத்தில் விமானப்போக்குவரத்து தொடங்கி உள்ளது. இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் முதன் முதலாக இந்த புதிய முனையத்துக்கு வந்தது.
முதன் முதலாக வந்த அந்த விமானத்துக்கு திருச்சி விமான நிலையத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து வாட்டர் சல்யூட் செய்யப்பட்டது. முதல் விமானத்தில் வந்த பயணிகளுக்கு ரோஜாப்பூ மற்றும் இனிப்புகள் கொடுத்து விமான நிலைய ஊழியர்கள் வரவேற்பு அளித்தனர்.
உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும். 75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு44.5 லட்சம் பயணிகளை கையாள முடியும்.