தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதித்த ஆளுநர் ரவியை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் சமூக நீதி பாதுகாப்பு கழகம் சார்பில் திருச்சி அரியமங்கலத்தில்
மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சம்சுதீன் கண்டன உரை நிகழ்த்தினார். போராட்டத்தில் சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசை அவமதிக்கும் வகையிலும், தமிழக மக்களை அவமதிக்கும் விதத்தில் செயல்பட்ட தமிழக ஆளுநர் உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும், மத்திய அரசு உடனே அவரை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இப்போராட்டத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவர் ஷைனி, இளைஞரணி செயலாளர் ஷர்புதீன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் தமிழரசன், மாரியப்பன், கந்தவேல்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர்
கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.