பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணியில் உள்ள அண்ணா உருவச்சலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக
சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலையிலிருந்து 500க்கும் மேற்பட்ட திமுகவினர் அண்ணா சிலை வரை மவுன ஊர்வலம் வந்தனர். இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ கே என் சேகரன், மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் துணை மேயர் திவ்யா உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.