ஜெயலலிதாவின் மக்கள் நலக் கொள்கையை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க செயற்குழு கூட்டம், திருப்புமுனை தரும் திருச்சி மாநகரில்,
கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில்,
கழகத் தலைவர் கோபால் தலைமையில், நாளை 4ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் திருச்சி பெமினா ஹோட்டலில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் திருச்சி மாவட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள், செயற்குழுவில் கலந்து கொள்ள வருகை தரும் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்னை வரவேற்க திரண்டு வந்து வரவேற்குமாறு தலைமை நிலைய செயலாளரும், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன்,
திருச்சி மாநகர்,மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஆகியோர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.