திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளரின் அலுவலக முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர். திருடிச் செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாஞ்சிநாதன் . இவர் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அலுவலகம் அமைத்து 5 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை வைத்து தொழில் செய்து வருகிறார். இந் நிலையில் கடந்த 19 ந்தேதி இரவு தனது அலுவலகம் முன்பு மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அடுத்த நாள் காலையில் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அவரது மோட்டார் பைக் மாயமாகி இருந்தது. மர்ம நபர் மோட்டார் பைக்கை திருடி சென்றனர் இதனையடுத்து தனது அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் மோட்டார் பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
ஆனால் கொள்ளிடம் போலீசார் புகார் அளிக்க அழைத்தும் மோட்டார் பைக்கை பறிகொடுத்த உரிமையாளர் புகார் கொடுக்க காவல் நிலையம் வரவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.