திருச்சி கே கே நகர் இந்திரா நகர் அலமேலு முங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தினம் தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், ஸ்ரீனிவாச பெருமாள் பல்வேறு வாகனங்களில் சிறப்பு வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. இன்று காலை ஸ்ரீனிவாசபெருமாள் அலமேலு
மங்கை உடன் திருத்தேரில் எழுந்தருளினார். சரியாக 9.20 மணிக்கு திருத்தேரானது பக்தர்களால் வடம் பிடித்து “கோவிந்தா கோவிந்தா” என்ற முழக்கத்துடன் திருத்தேர் இழுக்கும் வைபவம் நடைபெற்றது.
இந்த திருத்தேர் ஆனது கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு நான்கு மாத வீதிகளிலும் சுற்றி வந்து சுமார் 11.30 மணி அளவில் வீதி உலா நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து பெருமாள் அலமேலு தேர் நிலைக்கு வந்தவுடன் தரிசன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஸ்ரீ காளிதாஸ் குழுவினரின் நாதஸ்வர இசையும் நடைபெற்றது நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டினர் செய்திருந்தனர்.