திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் வக்கீல் அய்யாக்கண்ணு. இவர் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் என்ற விவசாய சங்கத்தை நடத்தி வருகிறார். இவர் உ.பி. மாநிலம் வாரணாசியில் பிரதமர் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றார். இவர் வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுக்கப்பட்டார்.
இது குறித்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தன்னை போட்டியிட விடிடாமல் தடுத்து விட்டனர் என கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு உ.பியில் என்ன வேலை.? உங்களுக்கு வாரணாசியில் யார் ஓட்டுப்போடுவார்கள். ? நீங்கள் சமூக சேவகர் என்றால் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டியது தானே? விளம்பரம் தேடி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள்.
இவ்வாறு சரமாரி எச்சரிக்கையாக கூறிய நீதிபதிகள், அய்யாக்கண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.