திருச்சி ஏர்போட்டிற்கு மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில், 2 பயணிகள் உயிருள்ள ஆமைகளை கடத்தி வந்துள்ளனர். இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . பெட்டிக்குள் மறைத்து கடத்தி வந்த உயிருள்ள ஆமைகள் குறித்த தகவல்களை வனத்துறையினருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் கொடுத்துள்ளனர். விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆமைகளை கைப்பற்றி தங்களது விசாரணையை தொடர உள்ளனர். 3 பெட்டிகளில் கடத்திவரப்பட்ட 6000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஆமை குஞ்சுகளை மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பிவைக்கும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த முகமது அசார், இராமநாதபுரம் அபீப் நாசர் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.