சிங்கப்பூரில் இருந்து நேற்று ஏர் இந்தியா விமானம் திருச்சி வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் வந்ததால் அவரை தனியாக அழைத்து சோதனை செய்தபோது அவரது ஜட்டியில் மறைத்து வைத்து இருந்த 292 கிராம் தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டது. இது 24 காரட் தங்கம். இதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 46 ஆயிரத்து 4 . இது குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.