திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும், சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது
சர்வதேச நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி செல்வதும் அதிகாரிகள் அதை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து ஸ்கூட் விமானம் சிங்கப்பூர் செல்ல இருந்தது .. இதில் பயணம் செய்யும் பயணி ஒருவர் கரன்சி நோட்டுகள் கடத்தி செல்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் அடிப்படையில்
பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் ஒரு பயணி தனது உடைமையில் மறைத்து 10.33 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான யூரோ மற்றும் ஜப்பான் கரன்சிகளை கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், பாம்புகள் உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது.. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும்
பயணிகள் “குருவி” என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது…
ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.