சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரை தனிமைப்படுத்தி, அவரது உடமைகளை சோதனையிட்டனர்.
அவரிடம் ஒரு ஐஸ் கிரசர் இருந்தது . அதை ஆய்வு செய்தபோது அதில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதில் ஒரு கிலோ 390 கிராம் தங்கம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.1.22 கோடி இருக்கும். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடத்தி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் இந்த தங்கத்திற்கான உரிமையாளராக இருக்க வாய்ப்பு இல்லை என்று கருதிய அதிகாரிகள் இவர் குருவியாக இருக்கலாம், உண்மையான கடத்தல் நபர் யார் என விசாரித்து வருகிறார்கள்.