திருச்சி விமான நிலையத்தில் மத்திய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 950 மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல் – ஒருவர் கைது…
திருச்சி விமான நிலையத்தில் மத்திய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு செல்லவிருந்த பயணிகளில் ஒருவரது பை மற்றும் பர்ஸ் ஐ சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 170 எண்ணிக்கை கொண்ட 100 டாலர் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாய் மதிப்பு 13 லட்சத்து 82 ஆயிரத்து 950 ஆகும். பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.