Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

மீட்கப்பட்ட ஆண் சடலம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஓ எம் டி பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார் இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் கிரேசி மேரி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் நிறுத்தத்தில் கிடந்த ஆண் நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது

திருச்சி ஜன 16 – திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மலேசியாவில் இருந்து வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் பிறந்த தேதி மற்றும் இடத்தை மாற்றி போலி பாஸ்போர்ட்டில்மலேசியாவில் இருந்து திருச்சி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இமிகிரேசன் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது அவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் என்று தெரிய வந்தது. இதே போன்று
கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரி சோதனை செய்து பார்த்த போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த கணேசன் (51) என்ற பயணி தனது பிறந்த தேதி மற்றும் இடத்தை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வந்தது தெரிய வந்தது. இதை யடுத்து இமிகிரேசன் அதிகாரி பவன் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணன், கணேசன் ஆகிய 2 பயணிகளை கைது செய்தனர்.