தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தானிய குறிச்சி பாவாஜி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (52). இவர் தனது பெயரை ராஜேந்திரன் என போலி ஆவணங்கள் மூலம் மாற்றி பாஸ்போர்ட் பெற்றார் .பின்னர் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்ல முயன்ற போது அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் வாங்கி பார்த்த போது அது போலி பாஸ்போர்ட் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து இமிகிரேஷன் அதிகாரி மெய்யப்பன் ஏர்போர்ட் போலீசிலத்தில் புகார் கொடுத்தார். போலீசார் உடனடியாக குணசேகரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மதுக்கூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகஜோதி (52) என்பவரும் போலி ஆவணங்கள் மூலமாக தனது பெயரை மாற்றி பாஸ்போர்ட் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் துபாய் செல்ல முயன்ற போது இமிகிரேஷன் அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார். பின்னர் ஜெகஜோதியை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.