திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி , விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி:
பாதுகாப்பு, பயணிகள் சேவை, சுங்கத்துறை, உணவு உள்ளிட்ட 32 அம்சங்களின் அடிப்படையில் சீனா,, ஜப்பான், பங்களாதேஷ் உள்ளிட்ட பசிபிக் ஆசிய நாடுகளில் உள்ள 48 விமான நிலையங்களில் சிறந்த விமான நிலையமாக விமான நிலைய சேவை மற்றும் தன்னிச்சையான அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின்படி 2 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில் சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் புது முனையம் கட்டும் பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலைய சுங்கத்துறை செயல்பாடுகளில் குறைகள் உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. விரைவில் குறைகள் களையப்படும். விமான ஓடுதள விரிவாக்க பணிகளுக்காக 345 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு தற்போது வரை 41 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.