திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று துபாய் செல்லும் பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர் .அதில்பெயர் முகவரியை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து இமிகிரேசன் அதிகாரி அந்த பயணிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 32 )என்பது தெரிய வந்தது.
இதையடுத்து இமிகிரேசன் அதிகாரி லோகநாதன் ஏர்போர்ட் போலீசில் புகார். கொடுதார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்துள்ளனர்.
