Skip to content
Home » திருச்சி ஏர்போட் முதல் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரை புதிய பஸ் சேவை தொடக்கம்..

திருச்சி ஏர்போட் முதல் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரை புதிய பஸ் சேவை தொடக்கம்..

  • by Senthil

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள், இன்று திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நேரடியாக பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், நம்பர் ஒன் டோல்கேட் வரை, பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.

மெய்யநாதன், மாவட்ட ஆட்சித் தலைவர்   மா. பிரதீப்குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர்  மு. அன்பழகன்   ,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர்  இரா. பொன்முடி அவர்கள், திருச்சிராப்பள்ளி விமான நிலைய இயக்குனர் திரு.கோ. கோபாலகிருஷ்ணன் , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர்  ஆ .முத்துகிருஷ்ணன் , துணை மேலாளர் (வணிகம்)   புகழேந்தி ராஜ் அவர்கள், உதவி மேலாளர்( தொழில்நுட்பம்)   ராஜேந்திரன் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!