திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான ஒரு ஆண் பயணி இருந்தார் அவரை சோதனை செய்த போது ஜீன்ஸ் பேண்டில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.16,37,325 மதிப்புள்ள 285 கிராம் எடையுள்ள 2 தங்க சங்கிலி, தங்க கட்டி பறிமுதல் . மேலும் அவரிடம் இருந்து ரூ.21,88,800 மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கத்தை கடத்தி வந்த பயனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.38,26,125 ஆகும்.
திருச்சி ஏர்போர்ட்டில் ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து 16 லட்சம் தங்கம் கடத்தல்..
- by Authour

Tags:திருச்சி ஏர்போர்ட்