திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் தங்களின் உடைமைகளில் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது இதனை அவ்வப்போது விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லவிருந்த மலிண்டோ விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு ஆண் பயணி தனது கை பையில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 750 மதிப்புள்ள 5000 பவுண்ட் ஸ்டெர்லிங்( இங்கிலாந்து கரன்சி) 2500 யூரோ (ஐரோப்பிய யூனியன் கரன்சி)வெளிநாட்டு பணத்தை
பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.