Skip to content

கைப்பையில் 74 லட்ச மதிப்புள்ள அமெரிக்க டாலர்.. திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள் அதிர்ச்சி..

  • by Authour

தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமான திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிக அளவு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சுங்கத்துறை வாண் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிங்கப்பூரிலிருந்து நேற்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ஸ்கூட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஆண் பயணியை சோதித்த போது அவரது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த Rs.74,19,000 மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் (வெளிநாட்டு கரன்சி) கண்டுபிடிக்கப்பட்டது..இதனை தொடர்ந்து வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்த ஆண் பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கடத்திவரப்பட்ட பணம் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்த கடத்திவரப்பட்டதா ? என்பது குறித்த கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!