திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் உடைமைகளில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.47,67,198 மதிப்புள்ள 839 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து ரூ.4,25,000 மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் (ஆப்பிள் போன்) பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் ஆண் பயணியிடம் விசாரணை செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.51,92,198 ஆகும்.
திருச்சி ஏர்போட்டில் ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….
- by Authour
