திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் குட்டி ராஜா (45) இவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இமிகிரேஷன் அலுவலகத்தில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் 9.30 மணி அளவில் வேலைக்கு வந்துள்ளார். மதியம் 1 மணி அளவில் பணியில் இருந்த அவர் விமான நிலையம் டெர்மினல் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீர் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அவரை அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் உடனடியாக இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் தீடீர் பரபரப்பும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.