திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் அதில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவது தொடர் கதை ஆகி இருந்து வருகிறது அதனை அவ்வப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்க்கு நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது 2 பயணிகள் தங்கள் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 1 கோடியே 5 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.