Skip to content
Home » திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த 2 பேர் கைது….

திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த 2 பேர் கைது….

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவிலிருந்து நேற்று விமானம் வந்தது. அப்போது அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரிசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அத்தாணி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன்( 45) என்பவர் பாஸ்போர்ட்டை இமிகிரிசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து இமிகிரேசன் அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து சுப்ரமணியனை கைது செய்தனர். இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் வன்னன் குண்டு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள் (56 ) என்பவர் நேற்று முன் தினம் சவுதி அரேபியா செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து இமிகேசன் அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!