Skip to content

பூட்டிய வீட்டில் 16.5 பவுன் நகைகள் கொள்ளை……திருச்சியில் துணிகரம்…

திருச்சி,ஏர்போர்ட், சந்தோஷ் நகர், கக்கன் காலனியைச் சேர்ந்தவர் சேவியர் ராஜா. இவரது மனைவி ராணி ஜூலியட் ரத்னா (55). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 ஒரு மகன் உள்ளார். சேவியர் ராஜா மஸ்கட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ராணி வீட்டை பூட்டிவிட்டு தன் கணவரை பார்க்க மஸ்கட் சென்றார். திருச்சி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் இருந்த 6 பவுன் மதிப்புள்ள 4 வளையல்கள், 4.5 பவுன் மதிப்புள்ள 1 வளையல், 2 பவுன் மதிப்புள்ள 1 தங்க செயின் மற்றும் 4 பவுன் மதிப்புள்ள 1 தங்க செயின் என மொத்தம் 16.5 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து ராணி நேற்று அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!