திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து விமானங்கள் மூலம் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் – அப்போது 8 பயணிகளின் உடைமைகளில் இருந்த வாசனை திரவியம் தெளிக்கும் பாட்டில்கள்,கைப்பை மற்றும் உணவுப்பொருளில் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்க தகடுகள்
மற்றும் மெல்லிய தண்டு வடிவிலான 24 காரட் தூய்மையான 1313.00 கிராம் தங்கமும், 22 காரட் தூய்மையான 25.00 கிராம் தங்கம் என மொத்தம் 1.3 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். 79.12 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்ததோடு – தங்கம் கடத்தி வந்த விமான பயனர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.