திருச்சியில் இருந்து இன்று காலை ஒரு விமானம்சார்ஜா செல்ல இருந்தது. திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விமானத்தில் 154 பயணிகள் இருந்தனர். திடீரென அந்த விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக அந்த விமானத்தை , விமானி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரை இறக்கினார். பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டனர். அதைத்தொடாந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் விமானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். விமானி சரியான நேரத்தில் கோளாறை கண்டுபிடித்ததால் விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
