திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா இன்று மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவில் பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். சின்ன கடைவீதி, சவுக், பாபு ரோடு, வடக்கு, தெற்கு ஆண்டாள் வீதிகள் தெப்பக்குளம் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது வழியில் ஒரு டீக்கடையில் வேட்பாளர் கருப்பையா, மற்றும் அதிமுக நிர்வாகிகள் தேநீர் அருந்தினர். அப்போது கடைக்கு வந்தவர்களிடமும் வாக்கு கேட்டனர். இதில் முன்னாள் அமைச்சர்
விஜயபாஸ்கர் மாவட்ட செயலாளர்கள் குமார்,சீனிவாசன், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன், கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் பங்கேற்றனர். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அதிமுக தொண்டர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.