நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஶ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர்,
கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர் கருப்பையாவிற்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இன்று
இஸ்லாமியர்கள் வழக்கம் போல் வௌ்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில்
திருச்சி பாலக்கரையில் உள்ள நானமுனா பள்ளிவாசலில் தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் வௌியில் வந்தனர். அப்போது அதிமுக வேட்பாளர் கருப்பையாஇஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.