திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடன் வளர்ச்சி குறித்தும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
தீர்மானம்.. 1: இதயதெய்வங்கள் புரட்சிதலைவர் எம்ஜிஆர், புரட்சிதலைவி அம்மா ஆகியோரின் ஆசியுடன் மாண்புமிகு
எதிர்கட்சிதலைவர் முன்னாள் முதல்வர் கழக பொதுச்செயலாளர் புரட்சிதமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க உறுப்பினர்
பணியினையும் அதேபோல் மகளிர்குழு, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை அமைக்கின்ற பணியினை
வேகமாகவும், விவேகமாகவும், முதன்மையாகவும் அமைப்பதற்கு அடித்தளமிட்ட அனைத்து நிலை கழக நிர்வாகிகளுக்கும்,
அப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டிருக்கின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும், நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. சேர்க்கை மற்றும் புதுப்பிக்கின்ற வாக்குசாவடி முகவர்கள்,
தீரமானம். 2 கழக உறுப்பினர் சேர்க்கை, வாக்குசாவடி முகவர், மகளிர்குழு, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைகளை
முறையாக அமைத்து கழக பணியிலும், தேர்தல் பணியிலும் தொய்வில்லாமல் செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு உட்பட்ட
மூன்று நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றிபெற்று நமது மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள்
பெற தொடர்ந்து களபணியாற்றவும், அதை தொடர்ந்து நடைபெறவிருக்கின்ற ஊரக உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற பொதுதேர்தல்களில் 100% வெற்றிபெற தொடர்ந்து உழைப்போம் என சூளுரைப்போம்.
தீர்மானம். 3: நடைபெறவிருக்கின்ற தேர்தல்களில் கழகம் வெற்றிபெற ஏதுவாகவும், தோல்வியுற்ற மக்கள் விரோத, தி.மு.க.
அரசின் கையாலாகத தனத்தையும், சுயநல, குடும்பநல தி.மு.க.வின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சுமார் 300 இடங்களில் தெருமுனை பிரச்சாரங்களை நடத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி விடியா தி.மு.க அரசின் செயல்பாட்டை தோலுரித்துக் காட்ட சபதமேற்போம்.
தீர்மானம். 4: திருச்சி மாவட்ட வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் 2021-சட்டமன்ற பொதுதேர்தலில் தி.மு.க கொடுத்த
வாக்குறுதிகள், கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றாததை கண்டித்தும் லால்குடி, மணப்பாறை
மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளில், கழக பொதுச்சசெயலாளர் அனுமதியை பெற்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீரமானம். 5
துளியும் நிர்வாக திறன் இல்லாமலும், குடும்ப ஆதிக்கத்தாலும், தமிழக அரசை தவறான வழியில் கொண்டு சென்று
மக்கள் மீது, 1.மின்கட்டண உயர்வு, 2. வீட்டுவரி உயர்வு 3.பத்திரப்பதிவு உயர்வு 4.வாகனங்களுக்கு பதிவுகட்டண உயர்வு
5.பால்கட்டண உயர்வு என மக்கள்மீது வரிசுமையை அதிகரித்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டின் பொம்மை
முதல்வர் ஸ்டாலின் அரசை அகற்றி மக்களுக்காக ஆட்சி செய்த புரட்சிதமிழர் எடப்பாடியார் முதல்வர் ஆக கள பணியாற்ற
சபதமேற்போம்.
தீர்மானம். 6 : புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு இதுநாள்வரை எதிரிகளிடமிருந்தும், துரோகிகளிடமிருந்தும்
இந்த இயக்கத்தை ஜனநாயக ரீதியாகவும், சட்டரீதியாகவும் மீட்டெடுத்து வலுவடையும் வகையில் சுமார் 2கோடி உறுப்பினர்களை
சேர்த்ததோடு மட்டுமல்லாமல், உள்கட்டமைப்பை தொடர்ந்து வலுவோடு வைக்கும் விதத்தில் பூத்கமிட்டி, மகளிர்குழு
மற்றும் இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறையை வாக்குசாவடி வாரியாக அமைக்க உத்திரவிட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் முதல் பூத் பொறுப்பாளர்கள் வரை நியமித்து இயக்கத்தை வீறுநடை போடவைக்கும் புரட்சிதமிழர். எடப்பாடியார் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதோடு, மீண்டும் தமிழக முதல்வராக்க பாடுபடுவோம் என சபதமேற்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.