திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்வருமாறு….
06.07,202 அன்று நமது மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி BHEL வளாகத்தில் நிறுவப்பட்ட கழக நிறுவனத்தலைவர் முன்னாள் முதல்வர் பாரதரத்னா பொன்மல செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவணுவ சிலையை திறந்து வைத்து பெருமை சேர்த்த கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர்கட்சித்தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
வரலாற்று சிறப்புமிக்க சிலைதிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இதயதெய்வம் பாரதரத்னா பொன்மல செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மரியாதை செலுத்திய தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணி செயலாளர்கள், மாவட்ட கழகருகர கழக, ஒன்றிய கழக, பகுதி கழக, பேரூர் கழக, வட்ட கழக, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் கழக செயல்வீரர்கள் வீராங்கணைகள் பொதுமக்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் அனைவருக்கும் இக்கூட்டத்தின் வாயிலாக நன்றியினை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
மாநாடு என்கிற பெயரில் பொதுகூட்டம் நடத்துபவர்களின் மத்தியில் சிலைதிறப்பு மற்றும் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று மாண்புமிகு கழக பொதுசெயலாளர் அவர்களால் பாராட்டு பெற்ற இந்நிகழ்வை முன்னின்று நடத்தி திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்த கழகத்தின் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கலந்து கொண்ட பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பை கொடுத்த BHEL நிர்வளம் மற்றும் தொழிலாளர்களுக்கும் குறிப்பாக அண்ணா தொழிற்சங்கத்திற்கும் திருவெம்பூர், மணப்பாறை மற்றும் இலால்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கழகத்தினருக்கும் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்து இக்கூட்டத்தில் திர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் 20 (20.08.2023) அன்று மதுரையில் நடைபெற உள்ள எழுச்சி மாநாட்டிற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் கழகம் சார்பாக பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் சென்று வெற்றி மாநாடாக மீண்டும் கழக ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைய அயராது பாடுபடுவோம் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.