Skip to content
Home » திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அரியமங்கலம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில், பாக நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் வார்டுகளில் எவ்வாறு திறம்பட பூத் (பாக) கமிட்டிகளை அமைப்பது குறித்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் சுபத்ராதேவி, ஒன்றிய கழக செயலாளர்கள் .இராவணன், கார்த்திக், பகுதி செயலாளர் தண்டபாணி, மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராஜமணிகண்டன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் பாஸ்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் .காசிராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரசன்னா, வட்ட கழக செயலாளர்கள் ரவிசங்கர், கணேசன், .தெய்வமணிகண்டன், கோபு சத்தியசீலன், .சரவணன், மணி, சங்கர், சோமசுந்தரம், மற்றும் பகுதி கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!