திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாரிஸ் மேம்பாலப்பணிகள் மந்தமாக நடைபெறுவதை கண்டித்தும்,
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று
திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்குஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கி பேசினார்.
மாநகர்,மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்
முன்னிலை வகித்து பேசினார்.ஆர்ப்பாட்டத்தில்
மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், அவைத் தலைவர் அய்யப்பன்,மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன்,முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜாக்குலின், வனிதா, பத்மநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன் ,ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் என்ஜினியர் இப்ராம் ஷா,மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கோ.கு. அம்பிகாபதி, அணிச் செயலாளர்கள் இலக்கிய அணி பாலாஜி, நசீமா பாரிக்,கலிலுல் ரகுமான் ,ஞானசேகர்,ஜோசப் ஜெரால்டு, ஏடிபி ராஜேந்திரன், ஜான் எட்வர்டு ,அப்பாஸ், இலியாஸ்,சகா புதீன்,ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, பாலக்கரை சதர்,
உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர் .பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.