Skip to content

திருச்சியில் மா. செ. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

சென்னையில் நடைபெற்ற   பாலியல் வன்கொடுமை  சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  கலெக்டர் அலுவலகம் அருகில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான  சீனிவாசன் தலைமையில் இந்த  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  சீனிவாசன் கருப்பு சட்டை அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில்  திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.  இதில் அதிமுக அமைப்பு செயலாளர்  ரத்தினவேல் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  இதில் வார்டு செயலாளர்கள், மகளிர் அணி, இளைஞர் அணி  நிர்வாகிகள் என ஏராளமானோர்  பங்கேற்றனர்.  அவர்களை போலீசார் கைது செய்து   பீமநகரில் உள்ள ஒரு மண்டபத்துக்கு கொண்டு சென்று தங்கவைத்துள்ளனர்.

error: Content is protected !!