கள்ளக்குறிச்சி சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை கோரியும், அந்த சம்பவத்தை கண்டித்தும் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்கள் முன்னாள் எம்.பி. குமார், பரஞ்ஜோதி, சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் திரளாக பங்கேற்றனர்.
இதில் “கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறிய தமிழக அரசே பதவி விலகு”, – “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்”, – ” # Resign_Stalin – போன்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.