நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தி.மு.க.
அதிமுக, மதிமுக, பாஜக, உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்.
திருச்சியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ இன்று தேர்தல் நடத்தும் அதிகாரி கலெக்டர் பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளருடன் திருச்சி மேயர் அன்பழகன், இனிகோ இருதராஜ் எம்.எல்.ஏ. புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் வந்திருந்தனர்.
அதிமுக வேட்பாளர் வேட்பாளர் கருப்பையாவும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மாவட்ட அதிமுக செயலாளர் ப. குமார், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் வந்திருந்தனர். அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனும் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் ஆகியோர் வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து நாதக வேட்பாளர் ராஜேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் சாட்டை முருகன் உள்பட பலர் வந்திருந்தனர்.
திருச்சியில் அடுத்தடுத்து முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததால் கலெக்டர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.