திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவின் சார்பு அணிகளில் பல்வேறு நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீக்கப்பட்ட நிர்வாகிகள் விவரம்:
திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பொறுப்பில் இருக்கும் டிஏஎஸ் கலிலூர் ரஹ்மான், மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜே. இலியாஸ், காஜாப்பேட்டை பகுதி கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் வெல்லமண்டி ஜி. சண்முகம், காந்தி மார்க்கெட் பகுதிக்கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும், சுரேஷ் குப்தா, மாவட்ட ஜெ. பேரவை தலைவர் ஜி.கே. அம்பிகாபதி,
மாவட்ட மாணவர் அணி இணைச்செயலாளர் பி. ரஜினிகாந்த், மாவட்ட வர்த்தக அணி இணை யெலாளர் ஆர். வாசுதேவன், தில்லைநகர் தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் புத்தூர் எஸ். ரமேஷ், ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து
விடுவிக்கப்படுகிறார்கள்.
திருச்சி மாநகர் மாவட்டத்தில் மாவட்ட பகுதி கழகம், மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளாகவும், பகுதிகளுக்கான திருத்தி
அமைக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகளாகவும், கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
திருச்சி மாநகரர் மாவட்ட அதிமுக பொருளாளராக தென்னூர் சீனிவாசபுரம் ராஜசேகரன் நியமிக்கப்படுகிறார்.
திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளராக வெல்லமண்ட ஜி. சண்முகம் (பாலக்கரை) நியமிக்கப்படுகிறார்.
மாவட்ட இணை செயலாளர்களாக எம். பெருமாள், என். மனோகரன், சுரேஷ் குப்தா, மாவட்ட துணை செயலாளராக தில்லை கே. சேகர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.