கள்ள சாராயம் மற்றும் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மணப்பாறை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப. குமார் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மணப்பாறை வடக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான செல்வராஜ், மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இஸ்மாயில்,
மணப்பாறை நகர கழக செயலாளர் பவுன் ராமமூர்த்தி, வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சேது, வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ம்ற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.