திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு துறையூர் அடிவாரத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்பு மலை அடிவாரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ரவிச்சந்திரன் ஒன்றிய பொருளாளர் ராம்குமார்
ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவசாந்த் மனோகரன் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.கே.பி.ஸ்ரீதர்
ஒன்றிய புரட்சித்தலைவி இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஆதனூர் செல்வராஜ் மாவட்ட பிரதிநிதி சொரத்தூர் ரமேஷ் முன்னாள் சேர்மன் மனோகரன் முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் சிங்களாந்தபுரம் கிளைக் கழக செயலாளர் ராஜதுரை, பாஸ்கர், லலிதா கண்ணன், வேம்பு ரங்கராஜ், செங்காட்டுப்பட்டி ஏகாம்பரம் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கழகப் பொதுச் செயலாளர் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்.