திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் அட்டக்கத்தி கெத்து தினேஷ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ்…. இந்த நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது என்றும் அவர்கள் பரிசுகள் பெற்று மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருந்ததை பார்க்கும் பொழுது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது அவர்களுடைய வெற்றி அவர்களுக்கு அவ்வளவு எனர்ஜி தருகிறது என்பது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஜன கன மன பாடும் பொழுது எனது பள்ளி கால நினைவுகள் வந்து சென்றது. இந்தக் கல்லூரி மாணவர்கள் மிகவும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர். லப்பர் பந்து திரைப்பட திரைப்படத்திற்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது படம் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது மிகப்பெரிய விருது. அட்டக்கத்தி முதல் நிறைய விருதுகளை எதிர்பார்த்தேன் குக்கூ விசாரணை போன்ற படங்களுக்கு எதிர்பார்த்தேன் ஆனால் அப்பொழுது அது ஓய்ந்து விட்டது ரப்பர் பந்து திரைப்படத்தை மக்கள் கொண்டாடியதை நான் விருதாகவும் மகிழ்ச்சியாகவும் பார்க்கிறேன்.
கெத்து தினேஷா அட்டகத்தி தினேஷா என கேட்டபோது … நான் எப்பொழுதுமே தினேஷ் தான் அட்டக்கத்தியும் கெத்து தான், கெத்து அன்பானவன் என்றார்.
அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார், மாணவர்கள் சுயமாக சிந்தித்து எதையும் செய்ய வேண்டும் , மாணவர்கள் மாத சம்பளத்தில் சிக்காமல் அவர்கள் சுயமாக தனியாக ஒரு பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்ய வேண்டும் என்றார்.
வேட்டுவம் என்ற படத்திற்காக நான் தயாராகி வருகிறேன் பா ரஞ்சித் இப்படத்தை இயக்குகிறார் இதில் பல கதாநாயகர்கள் இருப்பார்கள் என்றாலும் நான் தான் மெயின் கதாநாயகன் என்றார்.
விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் அதிக அளவில் தற்போது வெற்றி பெற்று வருகிறது என்றபோது ……. விளையாட்டு மிகவும் அருமையானது இந்த மேடையிலேயே வெற்றி பெற்று ஒரு கோப்பையை பெறும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. அதுபோல் மற்றொருவரை தோற்கடித்து இந்த கோப்பையை பெறுகிறோம் என இல்லாமல் …. அந்த சிஸ்டம் மாற வேண்டும். விளையாட்டு எப்பொழுதுமே வெற்றி பெறும் அது படமாக இருந்தாலும் சரி வியாபாரமாக இருந்தாலும் சரி என்றார்.