திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த மோட்டார் பைக் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் காலனி தெருவைச் சேர்ந்தவர் 60 வயதான மணி. இவர் தனது மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்த 37 வயதான பிரவீன்குமார் எதிரே மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிறுகனூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதமாக முதியவர் ஒட்டி வந்த மோட்டார் பைக் மீது பிரவீன்குமார் ஓட்டி வந்த
மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் முதியவருக்கு தலையில் படுகாயம் அடைந்தது. அதேபோல் பிரவீன் குமாருக்கும் படுகாயம் அடைந்தது. விபத்தை கண்ட அப்பகுதியினர் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..