திருவெறும்பூர் அடுத்த எலந்தப்பட்டி கிராமத்திற்கு பின்புறம் உள்ள அரைவட்ட சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலில் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக நவல்பட்டு போலீசாருக்குதகவல் கிடைத்தது, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்.
இறந்து கிடந்தவர் தஞ்சை பர்மா காலனி விளார் ரோடு பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் ராஜேஷ் (40) என்று தெரியவந்தது. ராஜேஷ் இங்கு எதற்காக வந்தார். அவர் விபத்தில் இறந்தாரா அல்லது யாரும் கொடூரமாக கொலை செய்து விபத்து போன்று நாடகமாட அவரை ரோட்டில் வீசி சென்றார்களா என பல கோணங்களில் போலீசார் விசாரிக்கிறார்கள்.
ராஜேஷ்க்கு அம்மு என்ற மனைவியும், தனசேகர் என்ற மகனும் உள்ளனர்.