திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது குறித்தும் இதனால் நாள் தோறும் பலரும் காயமடைந்து வருவது குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை கிராப்பட்டி பாலத்தில் நின்று கொண்டிருந்த மாடுகள் திடீரென தாறுமாறாக ஓடின. அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த வாலிபர் ஒருவர் தடுமாறு கீழே விழுந்தார். காலில் காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த நபர்கள் உடடியாக அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் கவனிப்பார்களா?