திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை பழங்காவேரியை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் பெரியசாமி (38). வெல்டிங் தொழி லாளி. இவர் நேற்று மதியம் பேட்டவாய்த்தலையில் இருந்து திருப்பராய்த்துறை நோக்கி பைக்கில் சென்றார். பெருகமணி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் பைக் மோதியதில் நிலைதடு மாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பெட்டவாய்த்தலை போலீசார் பெரியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். பெரியசாமிக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்