Skip to content

1மணி நேரத்தில் 600 கணக்குகளுக்கு விடை….. அபாகஸ் மூலம் திருச்சியில் சாதனை

  • by Authour

கண்களைக் கட்டிக்கொண்டு 60 நிமிடத்தில் 600 கணக்குகளுக்கு அபாகஸ் மூலம் விடைகண்டறிந்து உலகசாதனை நிகழ்த்திய மாணாக்கர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வயலூரில் நடைபெற்றது

2500 ஆண்டுகளுக்கு முன்னர் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கணிதமுறை அபாகஸ். இந்த பயிற்சி மூலம் கடினமான கணக்குகளுக்கும் எளிதில் விடை காணலாம். இதனால் மூளை செயல்திறனை அதிகரிக்கவும், மனதை

ஒருமுகப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளும் அபாகஸ் பயிற்சியினை மாணாக்கர்கள் பெற்று வருவதுடன் அபாகஸ் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் அபாகஸ் பயிற்சிபெற்ற 265 மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்களது கண்களை கட்டிக்கொண்டு 60 நிமிடத்தில், 600 கணக்குகளை மனக்கணிதம் மூலம் விடைகளை கண்டறிந்து தீர்க்கும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில்  நிகழ்த்தப்பட்டது. தமிழகம் ,கேரளா, ஆந்திரா  உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணாக்கர்களும் ஆன்லைன் மூலம் பங்கேற்று இருந்தனர்.

இதுவரையிலும் இந்த சாதனை, உலகில் எவராலும் நிகழ்த்தப்படாதநிலையில், செவி உலக சாதனை புத்தகம் மற்றும், அகிலஇந்திய உலகசாதனை புத்தகத்திலும் இடம்பெற உள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் கணிதத்தில் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் படிப்பில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திடவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறமுடியும் எனவும்  உறுதிபட தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!