திருச்சி, திருவெறும்பூர் தாலுகா பத்தளபேட்டைஊராட்சியில் இருவருக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களின் தொழில் பாத்திரங்கள் பழுது பார்ப்பது மற்றும் ஈயம் பூசுதல்.இருப்பினும் இவர்கள் நாடோடிகள் போல்ஊர் ஊராக சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் தற்பொழுது பத்தள பேட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு தங்கி வருகின்றனர்.இவர்களுக்கு குடியிருக்க வீடு இல்லை ரேஷன் ஆதார் கார்டு போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்கவில்லை. இவர்களின் குழந்தைகளுக்கு சாதி சான்று கிடைக்கவில்லை. எனவே தங்கள் சாதி பிள்ளை சமூகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டுமனை உள்ளிட்டவை வழங்க கோரி திருச்சி கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
திருச்சியில் ரேஷன், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் வழங்க கோரி கலெக்டரிடம் மனு…
- by Authour
