திருச்சியில் நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு விமான நிலையம் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிலையில் காலை முதல் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகல் நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துகொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார் அதன் பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக்கொண்டார் பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இந்த நிகழ்வில் பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் உட்பட அரசு அதிகாரிகள், பள்ளி மாணவ- மாணவிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார் பின்னர் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் துப்பாக்கிகளை கையாளும் நிகழ்ச்சி மற்றும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன பின்னர் குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற விமான நிலைய ஊழியர்களுக்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்
இதேபோல் திருச்சி பொன்மலை ரயில்வே கலையரங்க மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை மேலாளர் சந்தோஷ் குமார் படுவா கலந்துகொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து பின்னர் உரையாற்றினார் பின்னர் ரயில்வே போலீசார் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் அணிவகுப்பு மரியாதைகளை அவர் ஏற்றுக்கொண்டார் இந்த நிகழ்வில் ரயில்வே உயர் அதிகாரிகள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.