திருச்சி மாநகர கமிஷனர் சத்யபிரியா பொறுப்பேற்றதன் பின்னர் சரியாக 1 மாதத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்ததில் இதுவரை 72 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குற்ற சம்பவங்கள் ஈடுபட்ட 16 சரித்திர பதிவேடு ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொது அமைதி காப்பதற்காகவும் நன்னடத்தைக்கான பிணையம் பெற வேண்டி 32 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் 301 நபர்கள் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.