திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள நம்பர் 1 டோல்கேட்டில் ரூ. 7.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாக மையத்தை எம்எல்ஏ கதிரவன் இன்று திறந்து வைத்தார்.
பிச்சாண்டார் கோவில் ஊராட்சி நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7.20 லட்சம் மதிப்பில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், மற்றும் மாற்றுத்திறனாளிக்கு என தனித்தனியாக சுகாதார வளாகம்
கட்டப்பட்டது் இந்த சுகாதார வளாகத்தை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி் எஸ். பி. இளங்கோவன், மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள், தேமுதிக கிழக்கு ஒன்றிய செயலாளர் வி பி தங்கமணி மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.